Doctor Vikatan: ஒரு பெண் சீக்கிரமே, அதாவது சராசரி வயதுக்கு முன்பே பூப்பெய்திவிட்டால், அவளுக்கு மெனோபாஸும் சீக்கிரமே வந்துவிடும் என்பது உண்மையா? 10-11 வயதில் பூப்பெய்வது அந்தப் பெண்களின் ஆரோக்கியத்தை பாதிக்குமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவரும், லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணருமான ஆர். கார்த்திகா.
10- 11 வயதில் பூப்பெய்துவதால் எந்தப் பிரச்னையும் வராது. ஆனால் அதுவே 8 வயதுக்கு முன்பே ஒரு பெண் குழந்தை பூப்பெய்திவிட்டால், அதை அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். அதாவது 8- 10 வயதுக்குள் பூப்பெய்துவது சாதாரண நிகழ்வல்ல என்பதால் அவசியம் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
இப்படி சராசரிக்கு முன்பாக இள வயதிலேயே பூப்பெய்துவதால் அந்தப் பெண்ணுக்கு மெனோபாஸும் சீக்கிரமே வருமா என்ற கேள்விக்கு சில ஆய்வுகள் ‘ஆமாம்’ என்கின்றன.