Doctor Vikatan: சாப்பிட அடம்பிடிக்கும் பிள்ளைகள்… டொமேட்டோ சாஸ், கெட்ச்சப் கொடுப்பது சரியா? | Is it okay to give ketchup and tomato sauce?

Share

Doctor Vikatan: என்னுடைய பிள்ளைகள் இட்லி, தோசை, சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் ஏதேனும் ஒரு சாஸ் இருந்தால்தான் சாப்பிடுகிறார்கள். தக்காளி சாஸ், கெட்ச்சப்,கொடுப்பது சரியானதா…? சோயா சாஸ் சேர்த்த சமையல் ஆரோக்கியமானதா?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

இதுபோன்ற சாஸ் வகைகளில் சோடியம் அளவு மிக அதிகம். குறிப்பாக சோயா சாஸில் 100 கிராமுக்கு ஐயாயிரம் மில்லிகிராமுக்கு அதிகமான சோடியம் இருக்கும். உலக சுகாதார நிறுவனம் நமக்கு ஒருநாளைக்கு 2300 மில்லிகிராம் அல்லது 5 கிராம் சோடியம் போதுமானது என பரிந்துரைக்கிறது. அப்படியென்றால் இந்த சாஸ்களின் மூலம் நம் உடலில் சேரும் சோடியத்தின் அளவைக் கணக்கிட்டுப் பாருங்கள்.

இந்த சாஸ் வகைகளில் சோடியம் மட்டுமன்றி, நிறமிகள், ப்ரிசர்வேட்டிவ் போன்றவையும் அதிகம் சேர்க்கப்படுகின்றன. பச்சைமிளகாயை அரைத்து அப்படியே வைத்துப் பாருங்கள்….. ஒன்றிரண்டு நாள்களில் அதன் நிறம் மாறிவிடும்…. பூசணம் பிடிக்கும். எனவே கடைகளில் விற்கப்படும் சாஸ்கள் நீண்டகாலத்துக்கு கெட்டுப்போகாமலிருக்க ஏகப்பட்ட கெமிக்கல்கள் சேர்க்கப்படுகின்றன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com