உதாரணத்துடன் விளக்கினால் உங்களுக்கு இது எளிதில் புரியும். ஒரு பக்கம் மது பானங்களையும், இன்னொரு பக்கம் அரிசி, கோதுமை, சிறுதானியங்கள், உருளைக்கிழங்கு போன்றவற்றையும் வையுங்கள். மதுபானத்தில் உள்ள ஸ்டார்ச்சும், அரிசி, கோதுமை, சிறுதானியம், உருளைக்கிழங்கு போன்றவற்றில் உள்ள ஸ்டார்ச்சும் ஒன்றுதான்.
அதாவது ஆல்கஹால் எடுக்கும்போது கல்லீரல் அதை எப்படி மதிக்குமோ, அப்படித்தான் இந்த அரிசி, கோதுமை, சிறுதானியங்கள், உருளைக்கிழங்கு சாப்பிடும்போதும் மதிக்கும். ஆல்கஹால் எப்படி கொழுப்பாக மாறுமோ, அதே போலத்தான் கார்போஹைட்ரேட்டும் கொழுப்பாக மாறும்.

புரதச்சத்து இல்லாமல் வெறும் கார்போஹைட்ரேட் உணவுகளை மட்டும் உட்கொள்ளும்போது அது உடனே ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
எப்போதுமே புரதச்சத்து சாப்பிட்டால் அப்படி ரத்தச் சர்க்கரையானது சட்டென ஏறாது. உதாரணத்துக்கு, 2 இட்லி சாப்பிடப் போகிறீர்கள் என்றால், முதலில் ஒரு வடை சாப்பிட்டுவிட்டு, அதன் மேல் இரண்டு இட்லி சாப்பிட்டால் அது ரத்தச் சர்க்கரையாக மாற சற்று நேரம் எடுக்கும். அதுவே நான்கு இட்லி சாப்பிட்டால் வெகு சீக்கிரமே ரத்தச் சர்க்கரை அளவு எகிறிவிடும். கஞ்சி மட்டும் சாப்பிடும்போதும் இப்படித்தான் நடக்கும்.