இந்த வயதில் குழந்தைகளுக்கு ஒன்று அல்லது இரண்டு முட்டைகளுக்கு மேல் கொடுக்க வேண்டாம். குழந்தைகளுக்கு பச்சை முட்டை கொடுப்பது ஆரோக்கியத்தைக் கூட்டும் என்பது தவறான நம்பிக்கை. உண்மையில் பச்சை முட்டை கொடுப்பதால் குழந்தைகளுக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
பச்சை முட்டையில் உள்ள சால்மோனெல்லா மற்றும் ஷிங்கெல்லா (salmonella and shingella) போன்ற பாக்டீரியா கிருமிகள் ஃபுட் பாய்சனை ஏற்படுத்தலாம், செரிமானத்தையும் பாதிக்கலாம். எனவே எப்போதுமே குழந்தைகளுக்கு நன்கு வேகவைத்த, ஃப்ரெஷ்ஷாக சமைத்த உணவுகளையே கொடுக்க வேண்டும். முட்டையும் அதற்கு விதிவிலக்கல்ல. முட்டையை பொடிமாஸாகவோ, ஆம்லட்டாகவோ, வேகவைத்தோ கொடுப்பதுதான் சரியானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.