டெஸ்ட்டுகளின் ரிசல்ட்டை பொறுத்துதான் எப்படிப்பட்ட சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்ய முடியும். பெண்ணாக இருந்து குரலில் ஆண் தன்மை தெரிவதாகவோ, ஆணாக இருந்து குரலில் பெண் தன்மை தெரிவதாகவோ உணர்ந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் 18 வயது வரை காத்திருக்கலாம்.
தியேட்டர் உட்பட நடிப்புத் துறைகளில் உள்ள பலரும் தங்கள் குரல் வளத்தை மேம்படுத்திக்கொள்ள ஸ்பீச் தெரபி எடுப்பதைப் பார்க்கலாம். சரியான நேரத்தில், சரியான மருத்துவரை சந்தித்து, சரியான சிகிச்சையை எடுத்தால் 3 முதல் 6 மாதங்களுக்குள் சிகிச்சையின் பலனை உணர முடியும். சிலருக்கு ஸ்பீச் தெரபி பலனளிக்காமலும் போகலாம். அப்படிப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.
ஒருவரின் குரலின் தன்மை என்பது அவரது குரல் நாணின் நீளத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. எனவே, அறுவை சிகிச்சையின் மூலம் அந்த நீளத்தைச் சரிசெய்வதன் மூலம் குரலின் தன்மையையும் மாற்ற முடியும்.
வெளிநாடுகளில் திருநங்கைகளும் திருநம்பியரும் பால் மாற்ற சிகிச்சைகளின் ஒரு பகுதியாக, குரலின் தன்மையையும் இப்படி மாற்றிக்கொள்கிறார்கள். நம் நாட்டில் அந்தச் சிகிச்சை அவ்வளவு பிரபலமாகவில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.