மருந்துக் கடைகளில் நீங்களாக கால்சியம் மாத்திரைகள், சத்து மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவதுதான் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அவற்றின் அளவோ, எடுக்க வேண்டிய கால அளவோ, பக்க விளைவுகளோ உங்களுக்குத் தெரியாமல் எடுக்கும்போதுதான் பிரச்னையே.
போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, அளவுக்கு மீறி உடலுழைப்பைச் செலுத்துவது, துரித உணவுகளைச் சாப்பிடுவது, பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவது, கிரில்டு சிக்கன், மட்டன் உணவுகள், அளவுக்கதிக பால், அளவுக்கதிக கீரை, சாக்லேட், சோயா பால், சோடியம் அதிகமுள்ள உணவுகள் போன்றவற்றைச் சாப்பிடுவதால்தான் சிறுநீரகக் கற்கள் உருவாகும்.

ஷெல் எனப்படும் ஓடு உள்ள மீன் உள்ளிட்ட கடல் உணவுகள், கால்சியம் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடுவோருக்குத்தான் கிட்னி ஸ்டோன் பிரச்னை வரும்.
பார்பெக்யூ உணவுகளைச் சாப்பிடும் கலாசாரம் தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அந்த உணவுகள்கூட சிறுநீரகக் கற்களை உருவாக்கலாம். இவற்றை எல்லாம் தவிர்த்து, மருத்துவர் அறிவுறுத்தும் உணவுப்பழக்கத்தையும் சிகிச்சையையும் பின்பற்றினாலே உங்கள் கால்சியம் பற்றாக்குறையும் சரியாகும், கிட்னி ஸ்டோன் ஆபத்தும் தவிர்க்கப்படும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.