Doctor Vikatan: இரு பெண் குழந்தைகளையும் அடிக்கடி தாக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு; தடுக்க வழி உண்டா? | Doctor Vikatan: Vomiting, diarrhoea, frequently affecting – Is there a way to prevent it?

Share

Doctor Vikatan: என் முதல் பெண் குழந்தைக்கு 6 வயது. அடுத்த பெண் குழந்தைக்கு ஒன்றரை வயது. இருவருக்கும் அடிக்கடி வயிறு சரியின்றி போகிறது. வயிற்றுப்போக்கும் வாந்தியும் பாதிக்கிறது. இதற்கு என்ன காரணம்? தடுக்க முடியுமா?

Bhavani Priya, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த குழந்தைகள்நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி.

மருத்துவர் சஃபி

மருத்துவர் சஃபி

பொதுவாக 8 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு டான்சில்ஸ் எனப்படும் தொண்டை பிரச்னையும், வயிறு தொடர்பான குடல் அழற்சி பிரச்னையும் (Enteritis ) சகஜமாக பாதிக்கலாம்.

இந்த இரண்டு பிரச்னைகளுக்குமே முக்கிய காரணம் கை சுகாதாரமின்மைதான். அந்த வகையில் உங்கள் இரு குழந்தைகளும் கை சுகாதாரத்தைச் சரியாகப் பின்பற்றுகிறார்களா என்று பாருங்கள். அது மட்டுமன்றி, குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறவரின் கை சுகாதாரமும் ரொம்பவே முக்கியம்.

அடுத்து நீங்கள் கவனிக்க வேண்டியது குழந்தைகள் குடிக்கும் தண்ணீர். எந்தத் தண்ணீரைக் குடிக்கிறார்கள், அது எங்கிருந்து வரவழைக்கப்படுகிறது, கொதிக்கவைக்கப்பட்டதா, இரு குழந்தைகளும் ஒரே டம்ளரில் தண்ணீர் குடிக்கிறார்களா, அவர்கள் குடிக்கும் தண்ணீர் டம்ளரின் உள்ளே கை வைத்துப் பரிமாறப்படுகிறதா என்றெல்லாம் கவனிக்க வேண்டும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com