Doctor Vikatan: என் வயது 47. எனக்கு 2 வருடங்களாக ஆறு மாதங்களுக்கு ஒருமுறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோதான் பீரியட்ஸ் வருகிறது. கடைசியாக பீரியட்ஸ் வந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வந்தது. இது ஏன்… இதனால் ஏதாவது பிரச்னைகள் வருமா?
– சிவனேஸ்வரி, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.
மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் முற்றுப்பெறும் சராசரி வயது 51- 52. இதற்கு முந்தைய காலகட்டத்தை “பெரி மெனோபாஸ்’ என்கிறோம். பெரி மெனோபாஸ் காலகட்டத்தில் மெனோபாஸுக்கான அறிகுறிகள் ஆரம்பமாகும். அதாவது மாதவிலக்கு சுழற்சி தள்ளிப் போகலாம் அல்லது சீக்கிரமே வரலாம்.
ப்ளீடிங் மிக அதிகமாகவோ அல்லது மிகக் குறைவாகவோ இருக்கலாம். மனநிலையில் பெரிய அளவில் தடுமாற்றங்கள் ஏற்படலாம். கை, கால்களில் வலி ஏற்படலாம். இரவில் அதிகமாக வியர்த்துக் கொட்டலாம். அந்த வகையில் பீரியட்ஸ் சுழற்சியில் மாற்றங்கள் ஏற்படுவது மெனோபாஸின் முக்கியமான அறிகுறி. ஆனால் உங்கள் விஷயத்தில் கடந்த இரண்டு வருடங்களாக ஆறு மாதங்களுக்கொரு முறைதான் பீரியட்ஸ் வருவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.