அரிசி சாப்பிட்டால் சிலருக்கு வயிற்று வலி வரும். ஆனாலும், அதைச் சாப்பிட வேண்டும் என்ற உந்துதலில் சாப்பிடுவார்கள். அரிசி, உணவுப்பொருள்தானே… அதைச் சாப்பிட்டால் என்ன பிரச்னை என்ற கேள்வி எழலாம். ஆனால், சமைக்காத அரிசியைச் சாப்பிடுவது ஆரோக்கியத்தைப் பெருமளவில் பாதிக்கும். முக்கியமாக, இது செரிமான பிரச்னையை ஏற்படுத்தும். பற்களின் எனாமலை அரித்துவிடும்.
இந்தியாவில் 54 சதவிகித மக்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு இருக்கிறது. குறிப்பாக, பதின் பருவத்திலும், திருமண வயதிலும் இருக்கும் பெண்களுக்கு இந்த பாதிப்பு மிக அதிகம். அரிசி, மண் போன்றவற்றைச் சாப்பிடுவதால், அனீமியா எனப்படும் ரத்தச்சோகை பாதிப்பு அதிகரிக்கும். ரத்தச்சோகை அளவுக்கு அதிகமாகும்போது அது உயிரையே பறிக்கும் அளவுக்கு ஆபத்தாக மாறலாம். அரிசியை பச்சையாகச் சாப்பிடுவதால், ஃபுட் பாய்சன் ஏற்படும் ரிஸ்க்கும் அதிகம். குறிப்பிட்ட இந்தச் சம்பவத்தில் அந்தச் சிறுமி, அரிசியை ஊறவைத்துச் சாப்பிடும் வழக்கம் கொண்டவராக இருந்திருக்கிறார். அப்படி ஊறவைப்பதாலும் கிருமித் தொற்று ஏற்பட்டு, ஃபுட் பாய்சன் ஆகலாம்.

சமைக்காத அரிசியில் பசிலஸ் சீரியஸ் (Bacillus cereus ) எனப்படும் கிருமி இருக்கும். அதுதான் ஃபுட் பாய்சனை ஏற்படுத்தும் பாக்டீரியா கிருமி. இதன் வீரியத்தைப் பொறுத்து உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். சமைக்காத அரிசி சாப்பிடும் வழக்கம் உள்ளவர்களுக்கு எப்போதும் களைப்பு, தூக்கம், முடி உதிர்வு போன்ற பிரச்னைகள் வரலாம். எனவே, இந்தப் பழக்கத்தை நிறுத்துவதுதான் பாதுகாப்பானது.
எனவே, நீங்களும் சரி, உங்களுக்குத் தெரிந்த யாருக்காவது இந்தப் பழக்கம் இருந்தாலும் சரி, அவர்களை உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்று, இதிலிருந்து வெளியே வர அறிவுறுத்துங்கள். ஏதேனும் சத்துக்குறைபாடு இருக்குமானால், அதற்கான சிகிச்சை கொடுத்தாலே, இப்படிப்பட்ட வித்தியாசமான உணவுத் தேடலிலிருந்து வெளியே வரலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.