ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டியில் மோதிய திவ்யா தேஷ்முக் VS கோனேரு ஹம்பி இருவரும் இந்தியர்கள்.
இன்று, டைபிரேக் சுற்று நடைபெற்ற நிலையில், கோனேரு ஹம்பியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார் திவ்யா தேஷ்முக். அதனால், உலக ரேபிட் சாம்பியன் பட்டத்தை வென்ற கோனேரு ஹம்பிக்கு இதில் வெள்ளிப் பதக்கம் கிடைத்திருக்கிறது.

மகளிர் செஸ் உலகக் கோப்பையை முதல்முறையாக இந்தியப் பெண் வென்றதும், இரண்டாம் இடத்தைப் பிடித்ததும் இந்தியப் பெண்தான் என்பதும் இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் தருணமாக அமைந்தது.
இந்நிலையில் உலகக் கோப்பை வென்ற திவ்யா தேஷ்முக், இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் கோனேரு ஹம்பி இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.