இன்சைட் ஸ்போர்ட் ஊடகத்திடம் பேசியிருக்கும் யோகராஜ் சிங், “இது இர்ஃபான் பதான் பற்றியது மட்டுமல்ல. கம்பீர் இதுபற்றி பேசியிருப்பதைப் பார்த்திருக்கிறீர்கள்.
சேவாக் அதை வெளிப்படையாகவே சொன்னார். தான் எப்படி ஈயைப் போல அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறித்து ஹர்பஜன் சிங் பேசியிருக்கிறார்.
தோனி ஏன் அப்படிச் செய்தார் என்பது குறித்து ஒரு நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும்.

அதேசமயம், தோனி பதிலளிக்க விரும்பவில்லை. ஒருவர் பதிலளிக்க விரும்பவில்லை எனில் குற்ற உணர்ச்சி இருக்கிறது.
பிஷன் சிங் பேடி, கபில்தேவ், தோனி ஆகியோரைப் பற்றி நான் பேசுகிறேன். வீரர்களை அவர்கள் முட்டாள்கள் போல நடத்தினார்கள்.
நான் இதை வெளிப்படையாகச் சொல்கிறேன், நம் கிரிக்கெட் வீரர்களும், அணியும் நம் கேப்டனால் அழிக்கப்பட்டன” என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.