இது தவிர இங்கிலாந்தில் தொடர்ச்சியாக அதிக அரைசதங்கள் இந்தியர்கள் பட்டியலில் பண்ட்டுக்கு அடுத்தபடியாக கங்குலியுடன் ஜடேஜா இணைந்திருக்கிறார்.
மேலும், இங்கிலாந்தில் 30+ விக்கெட்டுகளும், 1000+ ரன்களும் அடித்த முதல் இந்திய வீரராகவும், ஒட்டுமொத்த அளவில் மூன்றாவது வீரராகவும் திகழ்கிறார்.

இதுமட்டுமல்லாமல், இங்கிலாந்தில் பேட்டிங் வரிசையில் 6 அல்லது அதற்கு கீழ் வரிசையில் இறங்கி அதிக அரைசதங்கள் அடித்த வீரராக (9 அரைசதங்கள்) சோபர்ஸுடன் (வெஸ்ட் இண்டீஸ்) முதலிடம் பகிர்ந்திருக்கிறார்.
கடைசி டெஸ்ட் போட்டியில் ஒரு அரைசதம் அதையும் முழுதாக தனதாக்கிவிடுவார். இவ்வாறு, பேட்டிங், பவுலிங் என எக்கச்சக்க சாதனைகளை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறார் ஜடேஜா.
இந்த நிலையில் விக்ரம் சந்திரா எனும் பத்திரிகையாளர், 2010-ல் ஜடேஜா குறித்து தோனி தன்னிடம் கூறியதைத் தற்போது எக்ஸ் தளத்தில் நினைவுகூர்ந்திருக்கிறார்.
அந்தப் பதிவில் விக்ரம் சந்திரா, “2010-ல் தோனியுடன் நான் எடுத்த நேர்காணலை நினைத்துப் பார்க்கிறேன்.
அப்போது, அடுத்தடுத்த போட்டிகளில் ஜடேஜா தோல்வியடைந்து கொண்டிருந்தார். அணியிலிருந்து அவரை நீக்க வேண்டும் என்று பலத்த குரல்கள் எழுந்தன.
அந்த சமயத்தில் தோனி என்னிடம், `நாம் பொறுமையாக இருக்க வேண்டும். ஒருநாள் இந்தியாவுக்குத் தேவைப்படும் ஆல்ரவுண்டராக ஜடேஜா இருப்பார்” என்று கூறினார்” எனப் பதிவிட்டிருக்கிறார்.
நடப்பு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஜடேஜாவின் ஆட்டம் குறித்த உங்களின் கருத்துகளை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.