Dhoni: "ரோஹித், கோலி, ஏன் என்னையும் உருவாக்கியவர் அவர்தான்.!"- தோனியை புகழந்த ரெய்னா

Share

நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறக்கக்கூடியவர் தான் தோனி என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா புகழ்ந்திருக்கிறார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சுரேஷ் ரெய்னாவிடம் தோனி குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

தோனி - ரெய்னா
தோனி – ரெய்னா

அதற்கு பதிலளித்த அவர், ” தோனி போன்ற ஒரு வீரர் நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பிறப்பார்கள்.

தோனி கேப்டனாக இருக்கும்போது தான் விராட் கோலியை உருவாக்கினார். ரோஹித் சர்மாவை உருவாக்கினார்.

ஏன் என்னையும் அவர் தான் உருவாக்கினார். சிஎஸ்கே அணியின் தோனி பாயின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

சிஎஸ்கேவில் உள்ள வீரர்களுக்கு தோனியின் வழிகாட்டுதல் தேவை. அவர் ஒவ்வொரு வீரரின் பங்களிப்பையும் வரையறுப்பார்.

தோனி
தோனி

ருதுராஜ் அணியை வழிநடத்தினாலும் தோனியிடம் இருந்து வீரர்கள் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் ” என்று கூறியிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com