சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழாவில் தோனி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார். மருத்துவமனையைத் திறந்து வைத்து விட்டு சில முக்கியமான விஷயங்களை தோனி பேசியிருந்தார்.

ரேபிட் ஃபயர் பாணியில் தோனியிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதாவது, குறிப்பிட்ட வார்த்தையைக் கேட்டவுடன் உங்கள் நினைவில் என்ன வருகிறது என்பதுதான் கேள்வி. அதற்கு தோனி சொன்ன பதில்கள்,
சென்னை – என்னுடைய இரண்டாவது தாய் வீடு, இந்த மண் தத்தெடுத்துக் கொண்ட மகன் நான்.
ரசிகர்கள் – அவர்கள் இல்லாமல் நாங்கள் இல்லை.
பைக்குகள் – என் வாழ்வின் ஆகப்பெரும் காதல். இதைச் சொன்னால் என் மனைவிக்குப் பிடிக்காதுதான். பைக்குகள் மட்டும்தான் என் மீது எந்தப் புகாரும் சொல்லாது.
தல – எனக்கு அந்தப் பட்டம் பிடிக்கும். ரசிகர்களின் அன்பால் கிடைத்த பட்டம் அது.

விசில் போடு – இடையில் அணிக்காக வேறு பாடலை உருவாக்க நினைத்தோம். ஆனால், இந்தப் பாடலை ரீப்ளேஸ் செய்ய முடியாது என்பதால் அப்படியே விட்டுவிட்டோம். சென்னை என்றால் விசில் போடுதான்.
அம்மா – நமக்காக நிறையச் சிரமங்களை எதிர்கொள்பவர். நம்மைத் திட்டினாலும் நமக்கு அம்மாதான் எல்லாமே. அவர்களின் அன்பு அளப்பரியது.
மனைவி – எல்லா கணவர்களுக்கும் ஒரே விஷயம். மனைவியிடமிருந்து தப்பிக்க வீட்டில் நமக்கென ஒரு மூலை இருக்கும்.

மகள் – மகள்கள்தான் பெற்றோரை அதிக அன்போடும் அக்கறையோடும் பார்த்துக் கொள்வார்கள் எனக் கேட்டிருக்கிறேன். சகோதரி மற்றும் மகள் வழி அதை உணர்கிறேன். வாழ்வில் எனக்குக் கிடைத்த ஆகச்சிறந்த விஷயம் மகள்.
இந்தியா – நான் தேசப்பற்றுமிக்கவன். இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு அரிதானது. ஒரு விளையாட்டு வீரனாக எனக்கு அது கிடைத்தது. வாழ்நாளுக்குமான திருப்தியை அதன்மூலம் பெற்றிருக்கிறேன்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…