இந்த நிலையில், தோனியின் கடைசி சீசன் என்ற பேச்சு குறித்து இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் பேசியிருக்கிறார். நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த கேள்விக்குப் பதிலளித்த ஸ்ரீகாந்த், “இன்றைக்கும் கீப்பிங்கில் தோனி நம்பர் ஒன். தோனி கேப்டன்சி மாதிரி வருமா… ருத்துராஜ் கேப்டனாக இருந்தாலும் பின்னாடி இருந்து தோனி அட்வைஸ் கொடுக்றாரு. இதுபோதும் இதுக்கு மேல என்ன வேணும். அவருடைய கடைசி மேட்ச் எதுவென்று யாருக்கும் தெரியாது. தன்னுடைய கடைசி போட்டியை சென்னையில் ஆடுவதுதான் தனது கனவென்று அவர் கூறியிருக்கிறார்.

அந்தக் கடைசி மேட்ச் 2025-ஆ, 2026-ஆ, 2027-ஆ என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நேரில் அவரிடம் ஜாலியாக பேசுவேனே தவிர, அவரின் பெர்சனல் விஷயங்களைப் பற்றி பேசமாட்டேன். ஐபிஎல்லில் சென்னையும், மும்பையும்தான் என் ஃபேவரைட். ஆர்.சி.பி-யையும் புடிக்கும். ஹைதராபாத் கடந்த இரண்டு ஆண்டுகளாக நன்றாக விளையாடுகிறது.” என்று கூறினார்.