பேபி ஏபி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் டெவால்ட் பிரேவிஸ், டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கெதிரான கோலியின் சாதனையை வெறும் மூன்றே போட்டிகளில் முறியடித்திருக்கிறார்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி தலா 3 டி20 போட்டிகள், ஒருநாள் போட்டிகளில் ஆட ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது.
இதில், ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டிம் டேவிட்டின் (83 ரன்கள்) அதிரடியால் 178 குவித்த ஆஸ்திரேலியா, 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.
அடுத்து ஆகஸ்ட் 12-ம் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டெவால்ட் பிரேவிஸின் (125) அதிரடி சதத்தால் 218 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்கா, 53 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
இந்த நிலையில், டி20 தொடரின் வெற்றியாளர் யார் என்பதை நிரூபிக்கும் கடைசி போட்டி இன்று நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 49 ரன்களை இழந்து தடுமாறிக்கொண்டிருந்த நேரத்தில், பிரேவிஸ் 26 ரன்களில் 53 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை 172-ஆக உயரப் பங்காற்றினார்.