Delhi election: அரவிந்த் கேஜ்ரிவால் பிம்பம் டெல்லி மக்கள் முன்பு உடைந்தது எப்படி? – பாஜக செய்தது என்ன?

Share

டெல்லி சட்டமன்ற தேர்தல்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, அரவிந்த் கேஜ்ரிவால்

  • எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், அரவிந்த் கேஜ்ரிவாலால் புது டெல்லி சட்டமன்றத் தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.

முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் ஜங்பூரா சட்டமன்ற தொகுதியில் தோல்வியடைந்தார். கடந்த ஆண்டு செப்டம்பரில் டெல்லியின் முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்தார். ஊழல் வழக்கில் ஜாமீன் பெற்ற சில நாட்களுக்குப் பிறகு அவர் இந்த முடிவை எடுத்தார்.

கேஜ்ரிவால் சிறையில் இருந்தபோது, அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. மேலும் டெல்லி அரசாங்கம் சிறையில் இருந்து நடத்தப்படுவதாகவும் அவர்கள் கூறி வந்தனர். ஆனால் இந்த கருத்துகளை கேஜ்ரிவால் புறக்கணித்தார்.

கடந்த ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி அன்று அரவிந்த் கேஜ்ரிவால் சிறைக்குச் சென்றார். 2024 மக்களவைத் தேர்தலுக்கு சற்று முன்பு இது நடந்தது. இதன் பின்னர், எதிர்கட்சிகளை குறிவைக்க மத்திய அரசு நிறுவனங்களை மோதி அரசாங்கம் தவறாக பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com