ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம், ரத்தக்குழாய்கள் வலுப்பெற்று, ரத்த அழுத்தம் சீராகும். அனீமியா என்ற ரத்தசோகை பாதிப்பு உள்ளவர்கள், பேரீச்சம்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், விரைவில் குணம் பெறலாம். மேலும் உடலில் ரத்தம் குறைந்தவர்களுக்கு, ரத்த விருத்தி செய்ய உதவுகிறது. உடல் மெலிந்தவர்கள் பேரீச்சம்பழத்தை உண்பதால், நல்ல பொலிவான தேகம் பெறலாம். மாரடைப்பு உள்ளவர்களுக்கு, பேரீச்சம்பழம் மிகவும் நல்லது. இதயத்தசை வலுப்பெற உதவும். ஏற்கெனவே பருமனான தேகம் உடையவர்கள் மற்றும் நீண்ட நாள் செரிமானப் பிரச்னை உள்ளவர்கள், முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இது உடலை இளைக்க விடாது.

பேரீச்சம்பழத் தேனூறல்
தினமும் பேரீச்சம்பழத்தை அரைத்து, பாலுடன் கலந்து அருந்தலாம். தேனில் ஊறவைத்து, தினமும் காலை வெறும் வயிற்றில் மற்றும் இரவு உணவுக்குப் பிறகு என 48 நாள்கள் தொடர்ந்து உண்டு வந்தால், உடல் நல்ல வலிமையும் பொலிவும் பெறும்.
பேரீச்சைக் காயும்… பாயும்!
பேரீச்சை மரத்தின் காயும் பழமும் உணவாகப் பயன்படுகின்றன. இந்த மரத்திலிருந்து செய்யப்படும் பாய்க்கு, ஈச்சமரப் பாய் என்று பெயர். ஈச்சமரப் பாயில் தூங்கினால், வாத நோய்கள் வராது. வயிற்றுப்புண் வராமல் தடுக்கும். பேரீச்சம் காய், சிறந்த உமிழ் நீர் பெருக்கியாகவும், பசியைத் தூண்டும் பொருளாகவும் பயன்படுகிறது. பேரீச்சை மரத்தின் குருத்து கப நோய்களையும் தீர்க்கும்.