இது சி.எஸ்.கே ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்திவரும் நிலையில், சென்னை அணியின் முன்னாள் வீரரான `மிஸ்டர் ஐ.பி.எல்” சுரேஷ் ரெய்னா, ஜடேஜா தக்கவைக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்துடனான உரையாடலில் பேசிய சுரேஷ் ரெய்னா, “நூர் அகமது தக்கவைக்கப்பட வேண்டும். அவர் ஒரு மிஸ்ட்ரி ஸ்பின்னர். எனவே, அவர் முக்கியமாகத் தக்கவைக்கப்பட வேண்டும்.
தோனி இந்த சீசன் ஆடுகிறார், எனவே அவரைத் தக்கவைக்க வேண்டும். ருத்துராஜ் கேப்டனாகத் தொடர வேண்டும்.

ஜடேஜாவை மீண்டும் தக்கவைக்க வேண்டும். அவர் சி.எஸ்.கே-வின் கன் (Gun) பிளேயர். அணிக்குப் பல வருடங்களாக நிறையப் பங்காற்றியிருக்கிறார். எனவே, `சர் ரவீந்திர ஜடேஜா’ அணியில் இருக்க வேண்டும்.
அணிக்கு உள்ளூர் ஓப்பனர் தேவை. மினி ஏலத்தில் அதற்கான வீரரைப் பார்க்க வேண்டும். டெவான் கான்வேவை வெளியிட வேண்டும்.
விஜய் சங்கருக்கு ஏற்கெனவே நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுவிட்டது. எனவே அவரையும், தீபக் ஹூடாவையும் சி.எஸ்.கே விடுவிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.