“இது போன்ற தொடருக்கு எந்த மாதிரி அணியை தேர்வு செய்கிறோம் என்பதை சுய பரிசோதனை செய்து கொண்டு கேள்வி கேட்க வேண்டும்”- அஷ்வின்| Ashwin questions selection in indian team
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றிருந்தது.இதனைத் தொடர்ந்து, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று (நவ. 30) ராஞ்சியில் நடைபெற்றது.ராஞ்சியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான…









