'Thala For A Reason' இல்ல 'சின்ன பையன்லாம் தல மேலயே அடிக்கிறான் சார்!'' – CSK பரிதாபங்கள்!
முதல் போட்டியில் பெங்களூரு வென்றுவிட்டது. இரண்டாவது போட்டியில் மும்பை வென்றுவிட்டது. ‘இப்போ நாம ஜெயிக்கலன்னா மானக்கேடா ஆச்சேயா…’ என்கிற பதைபதைப்புடன் தான் நேற்றைய போட்டியை சி.எஸ்.கே ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், ஏன் சார் டென்சன் ஆகுறிங்க…உடம்புக்கு ஆகாது! ஜெயிக்கிறோமா தோக்குறோமாலாம் இல்ல தோக்குறோம் அவ்வளவுதான் என்கிற முடிவோடு ஆடி ராஜஸ்தானிடம் சென்னை அணி தோற்றதைப் போல இருக்கிறது.RR vs CSK’நாங்க காயம்பட்ட சிங்கமா வரோம்…’ எனக் கேப்டன் ருத்துராஜ் சீசனுக்கு முன்பாக ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.…









