Tamannaah: கிரிப்டோகரன்சி மோசடி வழக்கு; தமன்னாவிற்குத் தொடர்பா? விசாரிக்க புதுச்சேரி போலீஸ் திட்டம் | Actress Tamannaah summoned by Puducherry police in Rs. 2.4 crore cryptocurrency scam?
நடிகை தமன்னா பாடியா கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டு இருப்பதாகச் செய்தி வெளியாகி இருக்கிறது.ரூ.2.4 கோடி கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக அவரிடம் பாண்டிச்சேரி போலீஸார் விசாரிக்க இருப்பதாகவும் செய்தி வெளியானது. ஆனால் அதனை தமன்னா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் நான் ஈடுபடுவதாகவும், அதில் மோசடி செய்துவிட்டதாகவும் வதந்தி பரவிக்கொண்டிருக்கிறது. இது போன்ற தவறான செய்தியை வெளியிடவேண்டாம் என்று மீடியா நண்பர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பாக வெளியாகி இருக்கும்…









