Kohli: “பொய் சொல்லி கோலியிடம் ஷூ வாங்கினேன்; அடுத்த மேட்சிலேயே..” – சுவாரசியம் பகிரும் நிதிஷ் ரெட்டி | nitish kumar reddy reveals how he get shoes from virat kohli
ஐபிஎல் தந்த வெளிச்சத்தால் மிகக் குறுகிய காலத்தில் இந்திய அணிக்குத் தேர்வாகி, பார்டர் கவாஸ்கர் போன்ற மிக முக்கியமான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி விளையாடிய வீரர் நிதிஷ் குமார் ரெட்டி. முதலில் பார்டர் கவாஸ்கர் தொடருக்கு அனுபவமில்லாத வீரர் எதற்கு என்று கேள்வியெழுப்பிய சுனில் கவாஸ்கர் உள்ளிட்டவர்களையெல்லாம், தனது ஆட்டத்தால் வாயடைத்தார்.நிதிஷ் குமார் ரெட்டிஅந்தத் தொடரில், அதிக ரன்கள் அடித்த இரண்டாவது இந்திய வீரர் நிதிஷ் குமார் ரெட்டிதான். சீனியர் பேட்டர்களே தடுமாறிய போதிலும், மெல்போர்ன் மைதானத்தில்…









