Doctor Vikatan: எல்லோருக்கும் விரதம் அவசியமா, விரதம் முடித்ததும் என்ன சாப்பிட வேண்டும்?
இன்று இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் (Intermittent fasting) என்பது மிகவும் பிரபலமாக இருக்கிறது. 16 மணி நேரம் சாப்பிடாமல் இருப்பது, மீதமுள்ள 8 மணி நேரத்தில் சாப்பிடுவது போன்ற இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் உங்களுக்கு ஏற்றுக்கொள்கிறது என்றால் அதைப் பின்பற்றலாம். விரதமிருக்கும் நேரத்தில் வெறும் தண்ணீர் மட்டும் குடிப்பது, பழங்கள் அல்லது பழச்சாறு குடிப்பது என உங்களுக்கு வசதியானதைச் செய்யலாம். விரதமிருப்பதை “ஒரு பொழுது’ என்று சொல்வார்கள். அதற்கேற்றபடி ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிடலாம். விரதமிருப்பதன் பலன்களை இன்று மேற்கத்திய நாடுகள் பெரிய…









