Doctor Vikatan: வாழைப்பழம் சாப்பிட்டால் மட்டுமே சரியாகும் மலச்சிக்கல்; தினம் சாப்பிடுவது சரியா?
நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைப் பெறவும், நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்தவும் சமச்சீரான பல்வேறு விதமான உணவுகளையும் சாப்பிட வேண்டியது அவசியம். பசியோடு இருக்கும்போதோ, உணவு நேரத்தில் வழக்கமான உணவுக்கான மாற்றாகவோ வாழைப்பழம் சாப்பிடுவதால் வயிறு நிறையுமே தவிர, சரிவிகித சத்துகள் கிடைக்காது. தினம் வாழைப்பழம் சாப்பிடுவதுதான் ஆரோக்கியம் என்ற எண்ணத்தில் எல்லோரும் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. குழந்தைகளுக்கு ஸ்மூத்தி செய்யும்போது வாழைப்பழத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். வொர்க் அவுட் செய்பவர்கள், உடற்பயிற்சி செய்வதற்கு முன்போ, செய்த பிறகோ வாழைப்பழம் எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸாகவும் கொடுக்கலாம்.மலச்சிக்கலைப் போக்க காய்கறிகள், சர்க்கரைச்சத்து குறைவாக உள்ள பிற…









