சந்தான செல்வம்: குவைத்தில் இரான் தாக்குதலில் மரணமடைந்த தமிழர்
பட மூலாதாரம், Handoutகட்டுரை தகவல்அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையே போர் நிகழ்ந்து வரும் சூழலில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த தொழிலாளி குவைத்தில் உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த அனிகுருந்தான் கிராமத்தைச் சேர்ந்த சந்தான செல்வம் என்பவர் தான் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர். குவைத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாக இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.ட்ரோன் தாக்குதலால் சுவர் இடிந்து விழுந்ததில் சந்தான செல்வம் சிக்கிக் கொண்டார் என அவருடன் குவைத்தில்…









