தி வெல்வெட் சண்டவுன்: AI எனக் கண்டறிய முடியாத இசைக் குழு; இனி இதுதான் எதிர்காலாமா?
அல்காரிதம் கேமிங் மற்றும் போலி கலைஞர்களைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதனால் ஸ்பாடிஃபை கடந்த ஆண்டில் மட்டுமே ஆயிரக்கணக்கான AI உருவாக்கிய பாடல்களை நீக்கியுள்ளது. கோல்ட்மேன் சாக்ஸின் கூற்றுப்படி, 2030 ஆம் ஆண்டில் 30% க்கும் மேற்பட்ட புதிய இசை AI- உதவியுடன் உருவாக்கப்படலாம், இது பல முக்கிய கேள்விகளை எழுப்பியிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு பாடல்களை உருவாக்க ஏற்கெனவே இருக்கும் பாடல்களையே முன்னோடியாக எடுத்துக்கொள்வது. பாடல்கள் உருவாக்கம் என்ற வணிகம் (முழுவதுமாக இல்லாவிட்டாலும்) செயற்கை நுண்ணறிவின் கைகளுக்குச் சென்றால் இசையில்…









