வி.எஸ். அச்சுதானந்தன் காலமானார்: மாநில எல்லைகளைத் தாண்டி பங்கேற்ற போராட்ட களங்கள்
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருந்த வி.எஸ். அச்சுதானந்தன், மாநில எல்லைகளைத் தாண்டியும் சுற்றுச்சூழல் பிரச்னைகளில் ஆர்வம் காட்டியவர். கட்சியின் நிலைப்பாட்டைத் தாண்டியும் கூடங்குளம் அணு உலை போராட்டத்துக்கு ஆதரவு அளித்தவர்.கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான வேலிக்ககத்து எஸ். அச்சுதானந்தன், முதுமையின் காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் ஜூலை 21ஆம் தேதி உயிரிழந்தார். கடைசி சில நாட்கள் வரை மிகுந்த ஆரோக்கியத்துடன் இருந்த…









