'மாஸ் காட்டிய சேட்டன்; அரையிறுதியில் இந்தியா!' – போராடி வீழ்ந்த கரீபியர்கள்!
‘எங்கக்கிட்ட 11 ஆபத்தான ப்ளேயர்ஸ் இருக்காங்க’ என பிரஸ்மீட்டில் பேசியிருந்தார் டேரன் சமி. அந்த அபாயமானவர்கள் கொடுத்த சவாலை திறம்பட எதிர்கொண்டு ஈடன் கார்டனில் சாதித்திருக்கிறது இந்திய அணி. ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை ஆடி இந்தியாவை அரையிறுதிக்குள் அழைத்து சென்றிருக்கிறார் சாம்சன். இந்திய அணி எப்படி வென்றது?Tossஇந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ்தான் டாஸை வென்றிருந்தார். நேரம் செல்ல செல்ல காற்றில் ஈரப்பதத்தின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துவிட்டார். சாய்…









