உலக வுஷு சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்திய வீராங்கனைகள் அசத்தல் | World Wushu Championship Indian women players advance to finals
புதுடெல்லி: 17வது உலக வுஷு சாம்பியன்ஷிப் பிரேசில் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனைகள் 3 பேர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். அதேவேளையில் ஆடவர் பிரிவில் 2 பேர் நாக் அவுட் சுற்றில் நுழைந்துள்ளனர். மகளிருக்கான 52 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் அபர்ணா, இந்தோனேஷியாவின் தாரிசா டீ ஃப்ளோரியன்டினாவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். தங்கப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் அபர்ணா, வியட்நாமின் நிகோ தி பூங்காவுடன் மோதுகிறார். 60 கிலோ எடை பிரிவு அரை…









