ஆசிய கோப்பை போட்டிகளில் சேஸிங் செய்வதே சிறந்தது – முன்னாள் ‘கியூரேட்டர்’ | Chasing is the best thing to do in the Asia Cup – Former curator

வரவிருக்கும் ஆசியக் கோப்பைப் போட்டிகள் துபாய், அபுதாபியில் நடைபெறுகிறது, இந்த சீசனில் அங்கு பிட்ச்கள் எப்படி இருக்கும், பனிப்பொழிவு குறித்து முன்னாள் பிட்ச் கியூரேட்டர் டோனி ஹெம்மிங் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தகவல்களைப் பகிர்ந்துள்ளார். டோனி ஹெம்மிங் 2007 முதல் 2017 வரை தலைமை கியூரேட்டராகப் பணியாற்றியுள்ளார். அதாவது இந்தப் பத்தாண்டுகள் காலக்கட்டத்தில் ஐசிசி சர்வதேச அகாடமி, துபாய் சர்வதேச ஸ்டேடியம் ஆகியவற்றில் பிட்ச் தயாரிப்பைக் கண்காணித்தவர் டோனி ஹெம்மிங். அவர் அளித்த பேட்டியில், “துபாய் மைதானத்தில்…

காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ், சிறைக்கு அழைத்துச் செல்ல முற்படும்போது தப்பி ஓடிய காணொலி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ், இன்று நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நீதிமன்ற சிறைக்காவலில் வைக்க சிறைக்கு அழைத்துச் செல்ல முற்படும்போது தப்பி ஓடிய காணொலி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்த 30 நிமிடங்களுக்கு பின் சங்கர் கணேஷ், மீண்டும் கிளை சிறைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார். டிஎஸ்பி சங்கர் கணேஷ் தப்பி ஓடவில்லை என்று காஞ்சிபுரம்காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.சம்பவத்தின் பின்னணிகாஞ்சிபுரம் மாவட்டம், பூசிவாக்கம் பகுதியில் “சிமெண்ட் முருகன்’ என்பவர், மற்றொரு நபருக்கும் தனக்கும் நடந்த அடிதடி சம்பவத்தில் தனக்கு உரிய…

வீரர்களின் உடல்நிலை குறித்து அணி நிர்வாகம் அக்கறை கொள்வதில்லை – ஷர்துல் தாக்கூர் வேதனை! | There is no concern about the health of the players – Shardul Thakur

தொடர்ந்து விளையாடி வரும் வீரர்களின் உடல்நிலை குறித்து அணி நிர்வாகம் எவ்வித அக்கறையையும் வெளிப்படுத்துவது இல்லை என்று ஷர்துல் தாக்கூர் வேதனை தெரிவித்துள்ளார். கடந்த 11 மாதங்களாக இடைவெளியின்றி பல்வேறு போட்டிகளில் விளையாடி வரும் ஷர்துல் தாக்கூர், வீரர்களின் உடல் தகுதி விஷயத்தில் கவனம் செலுத்தும் அணி நிர்வாகம் தொடர்ந்து விளையாடும் வீரர்களின் உடல் நிலை குறித்து கவனம் கொள்வதில்லை என வேதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர், “ஆண்டு முழுதும் பல்வேறு தொடர்களில் ஆடுகிறோம். எனவே ஒரே…

சமூகவலைத்தள முடக்கத்துக்கு எதிராக ‘Gen Z’ போராட்டம்: நேபாளத்தில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 23 நிமிடங்களுக்கு முன்னர்நேபாள தலைநகர் காத்மாண்டுவில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.காயமடைந்த பலரும் நியூ பனேஷ்வரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்த சுமார் 150 பேர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக காத்மாண்டுவில் உள்ள உள்ளூர் செய்தியாளர் பிபிசிக்கு தகவல் அளித்துள்ளார்.மேலும் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ராணுவமும் தெருக்களில் குவிந்துள்ளதாகவும், கடுமையான மோதல் நிலவி வருவதாகவும்…

"பஞ்சாப் அணியில் நான் அவமதிக்கப்பட்டேன்; பணத்தை விடவும்…" – மனம் திறந்த கிறிஸ் கெயில்

இந்தியன் பிரீமியர் லீக்கில் அதிவேக சதம் (30 பந்துகளில்), அதிக சிக்ஸர் (357), ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் (17), ஒரு போட்டியில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் (175 நாட் அவுட்) ஆகிய முறியடிக்க முடியாத சாதனைகளுக்குச் சொந்தக்காரர் கிறிஸ் கெயில்.2009-ல் கொல்கத்தா அணியில் தனது ஐ.பி.எல் கரியரைத் தொடங்கிய கெயில், 2011 முதல் 2017 வரை பெங்களூரு அணிக்கு மட்டுமல்லாது ஐ.பி.எல்லுக்கே அதிரடி முகமாக ஜொலித்தார்.அதன்பின்னர், 2018 முதல் 2021 வரை பஞ்சாப் அணியில் விளையாடினார்.…

Mumbai Lalbagh Raja: 24 மணி நேரப் பயணம்; கடல் சீற்றத்தால் 13 மணி நேரக் காத்திருப்பு; லால்பாக் ராஜா கடலில் கரைப்பு

லால்பாக் ராஜா விநாயகர் சிலைமும்பையில் விநாயகர் சதுர்த்தியின் இறுதி நாளான ஆனந்த சதுர்த்தி இந்த ஆண்டு சனிக்கிழமை வந்தது. அன்றைய தினம் மும்பை முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.ஆனால் சனிக்கிழமை தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்தது. மக்கள் மழையைப் பொருட்படுத்தாமல் ஆடல், பாடலுடன் பக்தர்கள் விநாயகர் சிலைகளை எடுத்துச்சென்றனர். மும்பையில் மிகவும் பிரபலமான லால்பாக் ராஜா விநாயகர் சிலை சனிக்கிழமை காலை மண்டபத்திலிருந்து புறப்பட்டது. வழி நெடுகிலும் லட்சக்கணக்கான பக்தர்கள்…

அமிதாப் ஆரம்பப் படங்களில் ஏற்று நடித்த கோபக்கார இளைஞன் தான் விராட் கோலியும்: சஞ்சய் பாங்கர் | Virat Kohli is the angry young man Amitabh played in his early films

சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் 70-களில் 80-களில் நடித்த அவரது ஆரம்பகாலப் படங்களில் கோபக்கார இளைஞன் (The Angry Young Man) என்ற பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். அப்போதைய அரசியல்-சமுக-பொருளாதாரச் சூழலும், பெருகி வரும் ஊழலும் இளைஞர்களை கோபக்காரர்களாக மாற்றியிருந்தது, அந்த உணர்வை அமிதாப் கதாபாத்திரங்களாக ஏற்று நடித்தார். அதே போன்ற ஒரு கோபக்கார இளைஞனாகத்தான் விராட் கோலி கேப்டனானார் என்கிறார் சஞ்சய் பாங்கர். இது தொடர்பாக டிடி ஸ்போர்ட்ஸிற்கு அளித்த நேர்காணலில் சஞ்சய் பாங்கர்…

'ராமரை சந்திக்கப் போகிறேன்' – செங்கோட்டையன் திடீர் பயணம் எங்கே?

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதுமான அண்மை நிகழ்வுகளை இந்த பக்கத்தில் பார்க்கலாம். Source link

உலக வில்வித்தை போட்டி: இந்தியாவுக்கு தங்கம் | India clinch first-ever gold at World Archery Championships

குவாங்ஜு: தென் கொரியாவின் குவாங்ஜு நகரில் நடைபெற்று வரும் உலகவில்வித்தைப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. நேற்று நடைபெற்ற ஆடவர் காம்பவுண்ட் பிரிவு போட்டியில் இந்தியாவின் ரிஷப் யாதவ், அமன் சைனி, பிரதமேஷ் புஜே ஆகியோர் அடங்கிய அணி 235-233 என்றபுள்ளிகள் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி தங்கம் வென்றது. அதேபோல் கலப்பு அணிப் பிரிவில் இந்தியாவின் ரிஷப் யாதவ், ஜோதி சுரேகா வென்னம் ஆகியோர் அடங்கிய அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது. நன்றி

குன்னூர்: டேன் டீ ஷாப்பில் அரசு தேயிலை தூள் கிடையாது! கொழிக்கும் தனியார் பெருந்தோட்டங்கள்! – tantea sales counter controversy .

டேன் டீ பெயரில் அரசு நடத்தும் இந்த ஷாப்புகளில் முன்னணி தனியார் நிறுவனங்களின் தேயிலை தூள்களே விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள காட்டேரி சந்திப்பு பகுதியில், டேன் டீ கடையில் முழுக்க முழுக்க தனியார் தேயிலை தூள்களை அடுக்கி விற்பனை செய்யும்படி வைப்பது, டேன் டீ தேயிலை தூள் ஒரு பாக்கெட் கூட இல்லாமல் இருப்பது என அடிக்கடி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தனியார் தேயிலை தூள் இந்த அவலம் குறித்து தெரிவிக்கும்…