“என் மகன் அல்ல, நானே வேட்பாளர்’’ – ராணிப்பேட்டை காந்தி எக்ஸ்க்ளூசிவ்! | change in dmk candidate for ranipet constituency – minister gandhi exclusive
ராணிப்பேட்டை தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி. இவர், ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க செயலாளராகவும் கட்சிப் பொறுப்பு வகிக்கிறார். கடந்த 1996-ல் முதல் முறையாக ராணிப்பேட்டை தொகுதியில் இருந்து சட்டமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார் காந்தி. அதைத்தொடர்ந்து, 2001 தேர்தலில் தோல்வி, 2006-ல் மீண்டும் வெற்றி, 2011-ல் மீண்டும் தோல்வி, 2016 தேர்தலில் வெற்றி என ஒருமுறை வெற்றி, மறுமுறை தோல்வி என தனது அரசியல் வரலாற்றை எழுதிக்கொண்டிருந்தார் காந்தி. `ராணிப்பேட்டை தொகுதியின் சென்டிமென்ட் இதுதான்’…









