BCCI; Arun Dhumal; பிசிசிஐ தலைவர் குறித்து ஐ.பி.எல் தலைவர் அருண் துமல் அப்டேட்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவராக 2022 அக்டோபர் முதல் செயல்பட்டு வந்த ரோஜர் பின்னி, கடந்த ஜூலைவில் 70 வயதை நிறைவு செய்ததையடுத்து, பிசிசிஐ விதிப்படி அவரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது.அதனால், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, தற்போதைய துணைத் தலைவராக இருக்கும் ராஜீவ் சுக்லா இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.இவ்வாறிருக்க, செப்டம்பர் 28-ம் தேதி பிசிசிஐ-யின் 94-வது ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெறவிருப்பதால், அக்கூட்டத்தில் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையில், சச்சின் டெண்டுல்கர் அடுத்த…









