மேட்ச் ரெப்ஃரீயை நீக்க ஐசிசி மறுப்பு: கடைசி நேரம் வரை மைதானத்துக்கு வரமறுத்த பாகிஸ்தான் அணி | ICC refuses to remove match referee Pakistan arrived late to stadium asia cup
துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில் டாஸின் போதும், போட்டி நிறைவடைந்த பிறகும் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் சக அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்கவில்லை. மேலும் டாஸ் நிகழ்வின் போது விளையாடும்…
டியல்லா: உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சர் செய்யப்போகும் முக்கிய பணி என்ன?
பட மூலாதாரம், ADNAN BECI/AFPபடக்குறிப்பு, புதிய ஏஐ அமைச்சர் டியல்லா நீண்ட காலமாகவே பல்வேறு வேலைகளைச் செய்து வருகிறார்.கட்டுரை தகவல்அரசாங்க அதிகாரிகள் “இதயமற்றவர்கள்” என்ற அவமதிப்பை அடிக்கடி எதிர்கொள்வார்கள். ஆனால் அல்பேனியா இந்த அவமதிப்பை ஒரு ஏஐ (செயற்கை நுண்ணறிவு) அமைச்சரை நியமிப்பதன் மூலம் இந்த நேர்மறையான விஷயமாக மாற்றியுள்ளது.ஏஐ-க்கான அமைச்சர் அல்ல, மாறாக முழுக்க முழுக்க ஏஐ-யால் மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு அமைச்சர். இந்த புதிய அமைச்சரின் பெயர் டியல்லா.மே மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி…
IND vs PAK : `சில மூன்றாம் தரப்பினர் கூச்சல்களுக்கு கவனம் செலுத்துவதை விட வெற்றியைக் கொண்டாடுவோம்’ – பிசிசிஐ செயலாளர் | BCCI Secretary says celebrate the victory of india
ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கெதிரான போட்டியில் (செப்டம்பர் 14) வெற்றிபெற்ற பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்காமல் சென்ற விவகாரம் பெரும் விவாதத்தைத் தூண்டியது.ஒருபக்கம் பாகிஸ்தான் பயிற்சியாளர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர், முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்கள் எனப் பலரும் அதிருப்தியில் இருக்க, மறுபக்கம் இந்திய அணி வீரர்கள், பிசிசிஐ-யைச் சேர்ந்தவர்கள் எதிரணியிடம் கைகுலுக்க வேண்டும் எனச் சட்டம் ஒன்றும் இல்லை என்கிற தொனியில் பேசிவருகின்றனர்.இதற்கிடையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலோ, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலோ இதில்…
Uddhav Thackeray – Raj Thackeray: “ராஜ் தாக்கரேயுடனான கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன்” – கூறும் உத்தவ் | “I will announce soon about alliance with Raj Thackeray” – says Uddhav
மகாராஷ்டிராவில் வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் மேயர் மாநகராட்சி உட்பட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் உத்தவ் தாக்கரேயும், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேயும் கூட்டணி அமைத்துப் போட்டியிடத் திட்டமிட்டு வருகின்றனர்.இது தொடர்பாக இரண்டு தலைவர்களும் கடந்த சில மாதங்களில் மூன்று முறை நேரில் சந்தித்துப் பேசியிருக்கின்றனர். சமீபத்தில் உத்தவ் தாக்கரே நேரடியாக ராஜ் தாக்கரே இல்லத்திற்குச் சென்று ராஜ் தாக்கரேயுடன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு…
மேட்ச் ரெஃப்ரீயை நீக்க முடியாது: பாக். கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி | icc rejects pakistan demand to remove match referee andy pycroft
துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸின்போது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகாவுடன் கைகுலுக்கவில்லை. மேலும் டாஸின்போது இரு அணிகளின் கேப்டன்களுமே தங்களின் விளையாடும் லெவன் பட்டியலை பரஸ்பரம் பகிரும் நிலையில், அந்த ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவும், சல்மான் அலி ஆகா இருவருமே மேட்ச் ரெஃப்ரீயான ஆண்டி பைகிராஃப்டிடமே பட்டியலை பரிமாறிக்…
பாலத்தீனம்: இஸ்ரேல் குண்டுவீச்சுக்கு நடுவே உயிர் தப்ப போராடும் மக்கள் – காஸாவில் என்ன நடக்கிறது?
பட மூலாதாரம், Anadolu via Getty Imagesகட்டுரை தகவல்இஸ்ரேலிய ராணுவம் காஸா நகரை கட்டுப்பாட்டில் எடுக்கும் நோக்கில் தரை வழியில் பெரிய அளவிலான தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற முயற்சிக்கின்றன.காஸா நகரின் ஷேக் ரத்வான் பகுதியைச் சேர்ந்த, மூன்று குழந்தைகளின் தாயான 32 வயது லினா அல்-மக்ரெபி, ஆபத்து இருந்தும் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்தார். ஆனால், ஒரு இஸ்ரேல் அதிகாரி தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனே வெளியேறுமாறு உத்தரவிட்டதால் அவர்…
“சட்டம் இல்லாதபோது கைகுலுக்க வேண்டிய அவசியமில்லை” – இந்திய பாகிஸ்தான் விவகாரத்தில் BCCI மூத்த அதிகாரி | There is no need to shake hands when there is no law Senior BCCI official on India-Pakistan issue
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பைத் தொடரில் செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற்ற பாகிஸ்தானுக்கெதிரான போட்டியில் வெற்றிபெற்ற பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்க மறுத்த சம்பவம் மூன்று நாள்களாக பெரும் விவாதப்பொருளாக இருக்கிறது.இந்த விவகாரத்தில், “பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்கிறோம்’ என கேப்டன் சூர்யகுமார் யாதவ் காரணம் தெரிவிக்க, `பாகிஸ்தானுடன் விளையாடவில்லையென்றால் இந்தியாவுக்குத்தான் இழப்பு’ என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஒருபக்கம் கூறுகிறார்.இன்னொருபக்கம், இந்திய அணிக்கு…
இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தை: ஒப்பந்த முன்னேற்றம் | India US bilateral trade negotiations 2025
சமீப மாதங்களாக இந்தியா–அமெரிக்கா இடையே சுமூகமான வர்த்தக சூழல் நிலவவில்லை. இதற்கு அமெரிக்கா, இந்தியா மீது விதித்த கூடுதல் வரிதான் முக்கிய காரணம். இந்நிலையில், இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச அமெரிக்க அதிகாரிகள் இந்தியா வந்திருந்தனர். நேற்று இந்தியா–அமெரிக்கா அதிகாரிகள் இடையே இருநாட்டு வர்த்தகப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தை குறித்து இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.மோடி, ட்ரம்ப்அறிக்கையில் கூறியிருப்பது என்ன? “இந்தியா–அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்காக, அமெரிக்காவின் வர்த்தக…
தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முதலிடம்! | india women cricket team smriti mandhana first in icc rankings
துபாய்: மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங்கில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 735 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். முலான்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் மந்தனா 63 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்திருந்தார். இதன் மூலம் அவர், தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார். மந்தனா முதன்முதலில் 2019-ம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்திருந்தார். இதைத் தொடர்ந்து…









