‘ஒரு மாத சம்பளம் தர தயார்’.. இலங்கை மக்களுக்கு உதவ அனுமதி கோரிய தீர்மானம் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றம்!!
சென்னை: இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவிட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக்கோரி சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை தமிழர்களுக்கு உதவிட அனுமதி கோரும் அரசினர் தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன்மொழிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிடும் பொருட்டு, தமிழ்நாடு அரசு அவர்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, பால் பொருட்கள்…









