ஆண்களுக்கு ஆயிரம் பிரச்னை… | Thousands of problems for men …
நன்றி குங்குமம் டாக்டர்யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்எப்போதும் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளைப் பற்றித்தான் நிறைய பேசிக் கொண்டிருக்கிறோம். பெண்களைப் போலவே ஆண்களும், ஹார்மோன் மாற்றங்களால் அந்தந்த வயதுக்கேற்ற பிரச்னைகளை சந்திக்கிறார்கள். இதைப்பற்றி பலருக்கும் தெரியாது. தெரிந்தாலும் அதைப்பற்றி அதிகம் பேசுவதுமில்லை. ஆண்களில் படிப்படியாக நிகழும் ஹார்மோன்கள் மாற்றங்கள், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி நாளமில்லாச் சுரப்பி மருத்துவர் கிருஷ்ணாசேஷாத்திரியிடம் பேசினோம்…‘‘நம் உடலின் ஒவ்வொரு செல்லும் இன்னொரு செல்லுடன் ஹார்மோன் மூலம்தான் தொடர்பு…









