Doctor Vikatan: கர்ப்பத்தடை மாத்திரைகளால் உடல் எடை அதிகரிக்குமா? | will contraceptive pills lead to body weight gain?
என் வயது 28. ஒரு குழந்தை இருக்கிறது. கர்ப்பத்தடை மாத்திரைகள் எடுத்து வருகிறேன். இந்த மாத்திரைகள் எடையை அதிகரிக்குமா?- சந்தியா (விகடன் இணையத்திலிருந்து)மருத்துவர் ஸ்ரீதேவிபதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.“கருத்தடை மாத்திரைகள் எடுக்கும் பலருக்கும் இந்தக் கேள்வி இருக்கிறது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை. ஒருவேளை எடை கூடினாலும், அது 0.3 கிலோ, 0.4 கிலோ என்ற அளவில்தான் கூடும். அதுவும் நீர் கோப்பதன் காரணமாக இருக்கலாம்.கர்ப்பத்தடை மாத்திரைகளில், ஈஸ்ட்ரோஜென்…








