தமிழக அரசின் இலவச பயிற்சி மையத்தில் படித்த மாணவர்கள் யுபிஎஸ்சி முதன்மை தேர்வில் தேர்ச்சி
தமிழக அரசால் நடத்தப்படும் இலவச பயிற்சி மையத்தில் படித்த 12 மாணவர்கள் யுபிஎஸ்சி சிவில் சர்விஸ் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும், அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், அகில இந்திய குடிமைப் பணிகளில் அடங்கிய முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளை எதிர்கொள்ளும் தேர்வர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள, சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள, ஏழை, எளிய தேர்வர்களுக்கு பயனளிக்கும் வகையில், இப்பயிற்சி மையம் …









