சர்வாதிகார மனப்பான்மை கொண்ட ஆர்எஸ்எஸ், பாஜ.வை மாநில கட்சிகளால் வீழ்த்த முடியாது: ராஜஸ்தான் மாநாட்டில் ராகுல் பேச்சு
புதுடெல்லி: ‘ஆர்எஸ்எஸ்.சும், பாஜ.வும் ஆபத்தானவை. சர்வாதிகார மனப்பான்மை கொண்டவை. மாநில அளவிலான கொள்கைகள் கொண்ட கட்சிகளால், இவற்றை வீழ்த்த முடியாது,’ என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் 3 நாள் சிந்தனை அமர்வு கூட்டம் ராஜஸ்தானின் உதய்பூரில் நேற்று நிறைவடைந்தது. இதில் நிறைவு உரையாற்றிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது: பாஜ, ஆர்எஸ்எஸ் போல கருத்து சுதந்திரத்தை நெரிக்கும் கட்சி அல்ல காங்கிரஸ். அதனால்தான் கட்சித் தலைமை பற்றிய கட்சி உறுப்பினர்கள் அப்பட்டமாக…









