Doctor Vikatan: மெனோபாஸுக்கு பிறகு ப்ளீடிங்; சாதாரணம்தானா?
என் வயது 57. பீரியட்ஸ் நின்று ஒன்றரை வருடம் ஆகிறது. இந்நிலையில் இப்போது திடீரென ரத்தப்போக்கு இருக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது? என்ன டெஸ்ட் செய்ய வேண்டும்?- சந்தியா (விகடன் இணையத்திலிருந்து)ஹெப்ஸிபா கிருபாமணிபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பேராசிரியரும் மகப்பேறு மருத்துவருமான ஹெப்ஸிபா கிருபாமணி.“57 வயதில், மாதவிடாய் நின்று மெனோபாஸ் வந்தபிறகு இருப்பதாகச் சொல்லப்படும் ரத்தப்போக்கு ஆபத்தான ஓர் அறிகுறி. 50 வயதுக்கு மேல் ஒரு வருடத்துக்கு, அதாவது தொடர்ந்து 12 மாதங்களுக்கு பீரியட்ஸ் வரவில்லை என்றால்…









