பஞ்சாப் பாடகரைக் கொலைசெய்த லாரன்ஸ் மிரட்டல் எதிரொலி; சல்மான் கானுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு! | Security has been beefed up for actor Salman Khan in Mumbai.
பஞ்சாப்பில் பாடகர் சிது மூஸ்வாலா இரண்டு நாள்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைச் சம்பவத்தில் திஹார் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஸ்னோய் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். சல்மான் கான் கடந்த 2018-ம் ஆண்டு ராஜஸ்தானில் கறுப்பு ரக அபூர்வ மான்களை வேட்டையாடியதாக அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வகை மான்களை பிஸ்னோய் சமுதாயத்தினர் புனிதமாகக் கருதுவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு லாரன்ஸ் பிஸ்னோய் கோர்ட்டுக்கு வெளியில் அளித்த பேட்டியில், “நாங்கள் சல்மான்…









