நூல் விலை உயர்வால் ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் விசைத்தறி, கைத்தறி இயங்காததால் அன்னிய செலாவணி பாதிப்பு: எடப்பாடி பழனிசாமி பேட்டி
சென்னை:சென்னை தலைமை செயலகத்தில் மாநிலங்களவை எம்பி பதவிக்கு அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் நிருபர்களிடம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: திமுக ஆட்சியில் ஓராண்டு காலம் ஆகியும், எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிக்கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை அதிகளவில் உள்ளது. டிஜிபி, கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த ஆபரேஷன் 2.0 என அறிவிக்கிறார். சுகாதாரத்துறை அமைச்சர் 102 டன் கஞ்சா பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.…









