AUSvIND: கிரிக்கெட் உலகின் அதிவேக பந்தை வீசினாரா ஸ்டார்க்? – உண்மை என்ன? | Did Mitchell Starc Bowl the Fastest Delivery in Cricket History? – What’s the Truth?

‘உண்மை என்ன?’ஸ்டார்க் வீசிய டெலிவரி அதையும் மிஞ்சியதால் அக்தரின் ரெக்கார்டை ஸ்டார்க் உடைத்துவிட்டார் எனக் கருதப்பட்டது. ஆனால், கொஞ்ச நேரத்திலேயே இதில் ஒரு தெளிவு கிடைத்தது. அதாவது, பந்தின் வேகத்தை அளவிடும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறினாலயே அந்த டெலிவரி 176.5 கி.மீ வேகத்தில் வந்ததாக காட்டப்பட்டிருக்கிறது. உண்மையில் அந்த டெலிவரி 140.8 கி.மீ வேகத்தில் மட்டுமே வீசப்பட்டிருக்கிறது.ஆக, இப்போதைக்கு சோயப் அக்தரின் ரெக்கார்டுக்கு எந்த ஆபத்தும் இல்லை. கிரிக்கெட்டின் அதிவேக பந்து அவர் வீசியதே! நன்றி

ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டது குறித்த ஜெய் ஷாவின் கருத்தை பாகிஸ்தான் எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, தாக்குதலை நிரூபிக்க ஜெய் ஷா(வலது) நம்பகமான எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என அதாவுல்லா தரார் (இடது) கூறுகிறார் 19 அக்டோபர் 2025ஆப்கானிஸ்தானில் ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) அறிக்கை மீது பாகிஸ்தான் கடுமையான எதிர்வினையை வெளியிட்டுள்ளது.”ஐசிசி மற்றும் அதன் தலைவர் ஜெய் ஷா ஆகியோரின் அறிக்கை பாகிஸ்தான் கிரிக்கெட்டைச் சேதப்படுத்துவதற்கான முயற்சி,” என பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை…

288 ரன்களை விரட்டிய இந்தியா: இங்கிலாந்துக்கு எதிராக போராடி தோல்வி – மகளிர் உலகக் கோப்பை | england beats india by 4 runs in womens odi world cup cricket

இந்தூர்: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை 4 ரன்களில் வீழ்த்தியது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. இந்தூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் எமி ஜோன்ஸ் 58, ஹீதர் நைட் 109, கேப்டன் நேட் சீவர் பிராண்ட் 38 ரன்கள் எடுத்தனர். 289 ரன்கள் எடுத்தால் வெற்றி…

ஆர்ஜே தீபக்கின் தொப்பி பட்டாசு, அனிதா சம்பத்தின் ஆடம்பர ஆட்டோ,தீபாவின் குவா குவா-தீபாவளி மெமரீஸ்!

பண்டிகைகளோட ஹைலைட்ஸ்ல ஒண்ணு, சந்தோஷ நினைவுகளை உருவாக்குறது. அப்படி, சில செலிப்ரிட்டீஸ்கிட்ட அவங்களோட ஹேப்பி தீபாவளி மெமரீஸ் கேட்டோம்…ஆர். ஜே தீபக்”எனக்குப் பட்டாசு போட ரொம்பப் பிடிக்கும். ஆனா, எங்க வீட்ல ஒரு ரூல் இருக்கும். பட்டாசு பாக்ஸை தீபாவளி அன்னைக்குத்தான் பிரிக்கணும்னு சொல்லுவாங்க. ஆனா, என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் தீபாவளிக்கு நாலு, அஞ்சு நாள் முன்னாடியே பட்டாசு வெடிக்க ஆரம்பிச்சிருவாங்க. நானும் அவங்களோட சேர்ந்து, அவங்களோட பட்டாசை வெடிப்பேன்.ஒரு தடவை, “டேய் கவனிச்சீங்களா..? இவன் பட்டாசு…

Aus vs Ind : ‘கோட்டைவிட்ட இந்திய பேட்டர்கள்; முதல் போட்டியையே வென்ற ஆஸ்திரேலியா!’ – என்ன நடந்தது? |AUS vs IND: Indian Batters Collapse as Australia Clinch Victory in the Opening Match! – What Really Happened?

ரோஹித் 8 ரன்களில் ஹேசல்வுட்டின் பந்தில் எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் கேட்ச் ஆக, கோலி ஸ்டார்க்கின் பந்தில் ஆப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற டெலிவரியில் பேட்டை விட்டு டக் அவுட் ஆனார். பவர்ப்ளேக்குள்ளாகவே ரோஹித், கோலி, கில் என மூன்று பேரின் விக்கெட்டையும் ஆஸ்திரேலிய பௌலர்கள் வீழ்த்தினர். ஆஸ்திரேலிய பௌலர்கள் இந்திய அணியின் டாப் ஆர்டர் மொத்தத்தையும் வீழ்த்த, இந்திய அணிக்கு மொமண்டமே கிடைக்கவில்லை. இடையே நான்கைந்து முறை மழையும் குறுக்கிட்டு ஆட்டத்தை சோதித்தது. இதனால் ஆட்டமும்…

ஆப்கானிஸ்தான் தாலிபன் அமைச்சரின் இந்தியப் பயணத்தால் பாகிஸ்தானுக்கு என்ன கவலை?

பட மூலாதாரம், Getty Images30 நிமிடங்களுக்கு முன்னர்ஆப்கானிஸ்தான் தாலிபன் நிர்வாகத்தின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கி சமீபத்தில் ஆறு நாள் பயணமாக இந்தியா வந்திருந்தார். ஆகஸ்ட் 2021 இல் ஆப்கானிஸ்தானில் தாலிபன் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, தாலிபன் அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு மேற்கொண்ட முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுதான்.உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியா காபூலில் உள்ள தனது தூதரகத்தை மீண்டும் திறக்கும் என்று அறிவித்தது.முத்தக்கியின் இந்தியப் பயணத்தின் நடுவே, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்…

சேம் கரண் அதிரடி வீண் | england batter sam curran blistering knock went on vein

கிறைஸ்ட்சர்ச்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 டி20 ஆட்டங்கள், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் டி20 தொடரின் முதல் போட்டி நேற்று கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. ஆல்ரவுண்டரான சேம் கரண் 35 பந்துகளில், 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 49 ரன்கள்…

பட்டாசு வெடிக்கும்போது என்ன துணியில் ஆடை அணிய வேண்டும்? – What kind of clothes should you wear when setting off fireworks?

“‘பொதுவாகவே தீபாவளிக்கு விலையுயர்ந்த, ஆடம்பரமான, அதிக வேலைப்பாடுகள் நிறைந்த ஆடைகள் உடுத்துபவர்கள் உண்டு. அதில் தவறில்லை. ஆனால், பட்டாசு வெடிக்கும்போது உடலில் தீக்காயங்கள் ஏற்படுவதைத் தடுக்க உகந்த துணி, நம் எல்லாருக்கும் தெரிந்த காட்டன் எனப்படும் பருத்திதான். காட்டன் உடைகளும் எளிதாக தீ பற்றி எரியக்கூடியதே என்றாலும் அதை அணிவதே பாதுகாப்பு.எடுத்துக்காட்டாக, தீபாவளி அன்று ஒருவர் காட்டன் உடை அணிந்தும், மற்றொருவர் synthetic fabric வகையில் ஒன்றான பாலியஸ்டர் உடையை அணிந்துகொண்டு பட்டாசுகளை வெடிக்கிறாரென்று வைத்துக்கொள்வோம். இவை…

தீபாவளியை முன்னிட்டு டெல்லியில் ராமாயணத்தை விளக்கும் ட்ரோன் ஷோ

டெல்லி கடமை பாதையில் 1.51 லட்சம் மண் விளக்குகள் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம். வழக்கமாக டெல்லியில் மாசைக் கட்டுபடுத்தவும், பட்டாசு வெடிப்பதை குறைக்கவும் பல இடங்களில் லேசர் ஷோ நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு நேற்றும் இன்றும் டெல்லியின் பல இடங்களில் லேசர் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று கடமை பாதையில் இந்தியா கேட் வரை நடைபெற்ற இந்த நிகழ்வில் 1.51 லட்சம் மண் விளக்குகள் ஏற்றி தீபாவளியைக் கொண்டாடினர். மேலும் இந்த நிகழ்வில், ராமாயணத்தை…

AUS v IND: 6 மாதம் கழித்து இந்திய அணிக்கு களமிறங்கிய ரோஹித், கோலி! – எப்படி அவுட் ஆனார்கள் தெரியுமா? | After 6 Months, Rohit and Kohli Return to the Field for India! – Do You Know How They Got Out?

நம்பர் 3 இல் விராட் கோலி களமிறங்கினார். 8 பந்துகளை எதிர்கொண்ட கோலி டக் அவுட் ஆனார். ஸ்டார்க் ஓவர் தி விக்கெட்டில் வந்து ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசி கோலியின் வீக் ஸ்பாட்டை குறி வைத்தார். அதற்கேற்றார் போல பீல்ட் செட்டப்பும் இருந்தது. இரண்டு ஸ்லிப்கள், பாய்ன்ட், பேக்வர்ட் பாய்ன்ட், தேர்டுமேன் என டைட்டாக அடைத்து வைத்திருந்தனர். இதற்கு பலனும் கிடைத்தது. ஸ்டார்க் ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தில் பேட்டை விட்டு பேக்வர்ட் பாய்ன்ட்டில்…