அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திடம் உள்ள பொருளாளர் பதவிக்காக மோதும் சமூக தலைவர்கள்: பதவிக்கு வரும் முன்பே குடைச்சல் ஆரம்பம்
சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் சென்று விட்டனர். ஒரு சிலர் மட்டுமே ஓ.பன்னீர்செல்வம் பக்கம் உள்ளனர். அதேநேரத்தில், அதிமுகவில் தற்போது ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக எடப்பாடி பழனிச்சாமி அணி அறிவித்துள்ளது. ஆனால், ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து தன்னை அடுத்த தேர்தல் வரும்வரை நீக்க முடியாது என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளார்.…








