அதிமுகவிடம் வாய்க்கொழுப்பு வேண்டாம் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும்: சீமானுக்கு ஜெயக்குமார் ஆவேசம்
சென்னை: வாய்க்கொழுப்பை அதிமுகவிடம் காட்டினால், பின்விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று சீமானுக்கு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: எம்ஜிஆர் இன்று அல்ல, நாளை அல்ல உலகம் முழுவதும் என்றும் போற்றப்படக்கூடிய தலைவர். அவருக்கு நினைவுச் சின்னம் தொப்பியும், கண்ணாடியுமாம். தமிழன் ஏற்றம் பெறுவதற்கும், தலை நிமிர்ந்து நிற்பதற்கும் காரணம் அண்ணா. அவருடைய…









