தியாகி மனைவிக்குப்பின் அடுத்த சந்ததியரை 2ம் வாரிசாக அங்கீகரித்து குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்: அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்
சென்னை: தியாகிகளின் மனைவிக்கு பிறகு, அடுத்த சந்ததியரை இரண்டாம் வாரிசாக அங்கீகரித்து குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆண்டுதோறும் நடைபெறும் சுதந்திர தினம் நாட்டின் சுதந்திரத்திற்காக தனது சொத்து சுகங்களை இழந்து, தன்னலம் மறந்து பொது நலத்தோடு போராடிய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களுக்கு ஈடுஇணை எதுவும் இல்லை. அவர்கள் என்றும் போற்றப்படக் கூடியவர்கள். இந்நிலையில் தியாகிகளின் மனைவிக்குப்…









