உடற்பயிற்சி, உடல்நலம் குறித்த உரையாடல்களில் தற்போது அடிக்கடி பேசப்படும் சொல், superfood.
சத்துகள் நிறைந்த கீரைகள், பழங்கள் மற்றும் விதைகள் போன்ற உணவுகளை சூப்பர் ஃபுட் என்கின்றனர். இவற்றைச் சாப்பிடுவது நம் உடலுக்கு அதிக பலன்கள் அளிப்பது மட்டுமல்லாமல் டயட்டை சரியாகப் பின்பற்றவும் உதவும்.
இந்த அதிக சத்துமிக்க உணவுகளின் பட்டியலில் கரப்பான்பூச்சி பாலும் (Cockroach Milk) இடம் பிடிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தாலியில் உள்ள University of Teramo மற்றும் நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டேமில் உள்ளா Erasmus University Rotterdam சேர்ந்து இந்த ஆய்வுகளை நடத்தியுள்ளன.
சிலருக்கு இது அறுவறுப்பாக இருந்தாலும், அறிவியலாளர்கள் கரப்பான் பூச்சி பால், குறிப்பாக Diploptera punctata என்ற கரப்பான் இனத்திலிருந்து கிடைக்கும் பாலானது மாட்டுப்பாலை விட 3 மடங்கு அதிக சக்தி நிறைந்தது என்கின்றனர்.
இந்த கண்டுபிடிப்பு ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே கரப்பான் பூச்சி பால் குறித்து பேச்சுகள் இருந்துவருகின்றன.
ஆய்வாளர்கள் கரப்பான்பூச்சி பால், அதிக புரதச்சத்து, கொழுப்புச் சத்து, சர்க்கரை கொண்டிருப்பதனால் சத்து நிறைந்த ஆகாரமாகக் கருதுகின்றனர்.