தற்போது ஜூலியன் டோராய் (Julian Dorey) உடனான யூ-டியூப் பாட்காஸ்டில் (podcast) முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரி கிரியாகோ, “வழக்கமான போரில், இந்தியா பாகிஸ்தானை வெல்லும் என்று நான் சொன்னேன், ஏனெனில் இந்தியாவுக்கு ஐந்து மடங்கு அதிகமான மக்கள் உள்ளனர். எனக்கு வந்த மரண மிரட்டல்களை நான் எண்ணிப் பார்க்கவே இல்லை. அதன் பிறகு, என் வழக்கறிஞர், ‘குறைந்த சுயவிவரத்தைக் (low profile) கடைப்பிடி; உங்களைச் சுற்றியுள்ளவற்றில் கவனமாக இரு’ என்று கூறியபோது, அனைத்திலும் சிறந்தது வந்தது— இம்ரான் கானின் அரசியல் கட்சியின் தலைவரிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது, அதன் பெயர் பாகிஸ்தான்… ஏதோ… கட்சி. அவர், நான் இந்தியர்களிடம் சொன்னதை மிகவும் கடுமையாகக் கண்டிக்கிறோம் என்றும், முன்னாள் பிரதமரிடமும், கட்சி உறுப்பினர்களிடமும், பாகிஸ்தான் மக்களிடமும் உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் கோரியிருந்தார்.” என்று நடந்ததை விளக்கினார்.
மேலும் வழக்கத்துக்கு மாறாக அவர் செய்ததைத் தெரிவித்தார். “என் வழக்கறிஞர், ‘அதை தூக்கி எறிந்துவிடுங்கள், தூக்கி எறிந்துவிடுங்கள்’ என்றார். ஆனால் நான் அதைத் தூக்கி எறியவில்லை. நான் அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன், அதில், ‘நீங்கள் மன்னிப்புக் கோர வேண்டும் என்று வைத்த கோரிக்கை குறித்து, உங்கள் மன்னிப்புக் கடிதங்களைக் கொண்டு நான் என் *** துடைப்பேன்’ என்று சொன்னேன். நான் ‘send’ பட்டனை அழுத்தி அனுப்பினேன். அதன்பிறகு, அவர்களிடமிருந்து நான் எந்தப் பதிலும் கேட்கவில்லை” என்று நவம்பர் 18 அன்று பதிவேற்றப்பட்ட அந்தப் பாட்காஸ்டில் கிரியாகோ தெரிவித்துள்ளார்.