Chef Dhamu: ‘எதிர்பார்க்காத ஒன்று…’ – பத்மஶ்ரீ விருதுக்கு நன்றி சொல்லும் செஃப் தாமு |Chef Damu thanks note for Padma Sri award

Share

இந்தியாவின் மிக உயரிய விருதுகள் பத்ம விருதுகள். இந்த ஆண்டு இந்த விருதுகள் யார் யாருக்கு தரப்பட உள்ளன என்பது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலம் நமக்கு நன்கு அறிமுகமான செஃப் தாமுவிற்கு “பத்மஶ்ரீ’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “பத்மஶ்ரீ விருது எனக்கு அறிவிக்கப்பட்டதுல ரொம்ப ரொம்ப சந்தோஷம். இது நான் எதிர்பார்க்காத ஒன்று. இதற்கு மத்திய அரசுக்கு என்னுடைய முதல் நன்றி. உள்துறை அமைச்சகம், தகவல் அமைச்சகம், மாநில அரசு, தேர்வு குழுவிற்கு என்னுடைய நன்றிகள்.

என்னுடைய மனைவி உஷா, மகள் அக்‌ஷயா, பேத்தி தன்யா, மாப்பிள்ளை ஹரிஷ் என என் குடும்பத்தினர் மற்றும் நல விரும்பிகள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. மீடியாவிற்கும், பிரஸுக்கும் என்னுடைய முக்கியமான நன்றிகள். இது என்னுடைய வாழ்நாள் சாதனையாக நினைக்கிறேன். இந்த மாதிரி விருது கிடைக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம். இது எனக்கு மிகப்பெரிய உந்துதல். இதை நியாயப்படுத்துற மாதிரி செயல்படுவேன். எனக்கு இந்த விருது கிடைத்ததில் ரொம்ப மகிழ்ச்சி” என்று பேசியுள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com