ஒலிம்பிக்கில் மூன்று முறை தங்கப்பதக்கம் வென்ற பிரிட்டிஷ் குதிரையேற்ற வீராங்கனை ஷார்லோட் டுஜார்டினுவிற்கு (Charlotte Dujardin) ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் வீராங்கனை ஷார்லோட் டுஜார்டினு, தனது குதிரையை அதிகமாகச் சவுக்கால் அடித்துத் துன்புறுத்தியதற்காகக் குற்றம்சாட்டப்பட்டார். நான்கு வருடத்துக்கு முன்பு, அவர் பயிற்சியில் இருக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று, கடந்த ஜூலை மாதம் வெளியானது. டுஜார்டின் ஒரு மாணவனின் குதிரையைப் பலமுறை சவுக்கால் அடிப்பதுபோல காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.
ஒரு நிமிடத்திற்குள் 20க்கும் மேற்பட்ட முறை குதிரையைச் சவுக்கால் அடித்தது அதில் தெரியவந்தது. இதன் விளைவாக, இந்த கோடையில் பாரிஸ் விளையாட்டுப் போட்டிகளிலிருந்து டுஜார்டின் விலகினார். இதற்கிடையில், FEI (குதிரையேற்ற விளையாட்டுகளுக்கான கூட்டமைப்பு) டுஜார்டினை ஒரு வருடத்துக்குப் போட்டிகளில் கலந்துகொள்ள தடை வித்திருக்கிறது. மேலும், 10,000 சுவிஸ் பிராங்குகள் அபராதம் விதிக்கப்பத்திருகிறது.